Advertisement
Lennim Jobs
வாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது!

07-11-2019

வாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது!

07-11-2019

தேவையில்லாத வாட்ஸ் ஆப் குரூப்களில் உங்கள் நண்பர்கள் உங்களை சேர்கிறார்களா? கவலை வேண்டாம் உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை யாரும் எந்த புதிய குரூபிலும் சேர்க்க முடியாது. இதற்கான சேவையை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்தது, தற்பொழுது இதை அப்டேட் செய்துள்ளது.

உங்கள் எண் தெரிந்த உங்கள் நண்பர்கள், உங்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத குரூப்களில் உங்களைச் சேர்த்துவிடுகின்றனர். இதனால் தேவையில்லாதா மெசேஜ்கள் வந்து உங்களைக் கடுப்பேற்றும், இதனால் அந்த குரூப்பிலிருந்து வெளியேற வேண்டியதும் இருக்கும்.

இதற்காக வாட்ஸ் ஆப் புதிய குரூப் பிரைவசி சேவையை அறிமுகம் செய்தது, தற்பொழுது இந்த சேவையில் உள்ள நோபடி(Nobody) ஆப்ஷனை நீக்கிவிட்டு மை காண்டாக்ட்ஸ் எக்ஸ்செப்ட் (My Contacts Except) என்ற புதிய ஆப்ஷனை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய சேவையை உங்கள் வாட்ஸ் ஆப்பில் ஆக்டிவேட் செய்ய முதலில், உங்கள் வாட்ஸ் அப் செயலி சமீபத்திய அப்டேட்டை பெற்றிருக்க வேண்டும். உங்கள் வாட்ஸ் ஆப் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கீழ் வரும் செயல்முறைகளைப் பின்பற்றுங்கள்.

செயல்முறை :

  • உங்கள் போனில் வாட்ஸ் ஆப் ஓபன் செய்துகொள்ளுங்கள். 
  • வாட்ஸ் ஆப்பில், வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ்(Settings) கிளிக் செய்யுங்கள். 
  • அக்கௌன்ட்(Accounts ) ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
  • பிரைவசி(privacy) ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
  • இப்பொழுது குரூப்ஸ்(Groups) என்ற புதிய ஆப்ஷன் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும், அதை கிளிக் செய்யுங்கள். 
  • அதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள மூன்று ஆப்ஷன்களில்(Everyone, My Contacts, My Contacts Except) ஒன்றை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

Everyone, My Contacts, My Contacts Except என்ன செய்யும்? 
நீங்கள் Everyone கிளிக் செய்தால் யார் வேண்டுமானாலும் உங்களை புதிய குரூப்பில் சேர்க்க முடியும். நீங்கள் My Contacts கிளிக் செய்தால் உங்கள் நண்பர்கள் மட்டுமே உங்களை புதிய குரூப்பில் சேர்க்க முடியும். நீங்கள் My Contacts Except கிளிக் செய்தால் சிலரை மட்டும் பிளாக் செய்து மற்றவர்களுக்கு அனுமதி வழங்கும்.

.