வா ஸ்டாலின் வா ! மோதிப் பார்க்கலாம் வா! - வைரல் வீடியோ

Come on Stalin! Let's meet and see! - Viral video

வா ஸ்டாலின் வா ! மோதிப் பார்க்கலாம் வா! - வைரல் வீடியோ

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழ் நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிர போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சென்னையைப் போலவே தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் திமுக அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்ததை கண்டித்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளரும் நகர் மன்ற துணைத் தலைவருமான கண்ணன்  தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தின் முழக்கத்தில் ”வா ஸ்டாலின் வா.. மோதிப்பார்க்கலாம் வா” என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை சண்டைக்கு அழைக்கும் விதமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காவல்துறை கைது செய்தது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.