படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய தோணி

Dhoni started a film production company

படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய தோணி

கிரிக்கெட் ஜாம்பவான் தோணி தமிழ் கிரிக்கெட் ரசிகர்களின் கதாநாயகன். தோணி தற்போது ' தோணி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் 'தோணி என்டர்டெயின்மென்ட்' சார்பில் தயாரிக்கப்படும் முதல் படம் தமிழ்படமாகத்தான் இருக்கும் என்று  பதிவிட்டுள்ளார். இது தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.