வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது - வானிலை ஆய்வு மையம்

Northeast Monsoon intensifies - Met Office

வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது . இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதியில் தொடர்ந்து தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது  ஒரு இடத்தில் அதி கனமழையும், 7 இடங்களில் மிக மழையும், 20 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சீர்காழியில் 22 cm,  தஞ்சையில் 17 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தற்பொழுது தென் தமிழகப்பகுதி வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழச்சி நிலவுகிறது . நவம்பர் 7ஆம் தேதி வரை தமிழகம், புதுவை ,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் .கனமழை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை,  ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம் செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர், திருச்சி ,கரூர் ,நாமக்கல், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை விட்டுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். மீனவர்களுக்கான சிறப்பு எச்சரிக்கை ஏதுமில்லை. என்று  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்  பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.