சர்ச்சையில் சிக்கிய சதீஷை கண்டித்த பிரபல இயக்குனர்

The famous director condemned Satish who was caught in the controversy

சர்ச்சையில் சிக்கிய சதீஷை கண்டித்த பிரபல இயக்குனர்
google

 நடிகை சன்னிலியோன் நடிக்கவுள்ள படத்தின் புரோமோசன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சதிஷ் சன்னிலியோன் வெளிநாட்டுப்பெண் அவரே சேலையின் வந்திருக்கிறார். கோயம்பத்தூர் பெண் தர்ஷா குப்தா எப்படி ஆடை உடுத்தியுள்ளார் என்று பாருங்கள் என்று காமெடியாக பேசினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது. இருபெண்களின் ஆடையை ஒப்பிட்டுப் பேசிய சதீஷின் இந்த பேச்சுக்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். பிரபல பாடகி சின்மயி இதுகுறித்த வீடியோ காட்சியை சுட்டிக்காட்டி தன் கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் நவீன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ,சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. 

சதீஷ் சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நிங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான். என்று தெரிவித்துள்ளார்.