உதயநிதியின் ‘கலகத்தலைவன்’ டீசர் வெளியீடு

Udhayanidhi's 'Kalagthalaivan' Teaser Released

உதயநிதியின் ‘கலகத்தலைவன்’ டீசர் வெளியீடு
google

மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான கலகத்தலைவன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

நடிகரும் திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் , திரைப்படங்களிலும் தன் கவனத்தை அவ்வப்போது செலுத்தி வருகிறார். அருண்ராஜா காமராஜ் இயக்கிய, நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தடம், மீகாமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கும் கலகத் தலைவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.