``ஹாங்காங்கை முழுவதுமாக சீனா கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது!" - தேசிய மாநாட்டில் ஜி ஜின்பிங் பேச்சு

சீனக் குடியரசு நாட்டை ஆட்சி செய்துவரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின்(CCP) 20-வது தேசிய மாநாடு பீஜிங்கில் இன்று தொடங்கியது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த மாநாடு, இன்று(அக்டோபர் 16) முதல் அக்டோபர் 22-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதுவொருபுறம் நடந்துகொண்டிருக்க, மூன்றாவது முறையாக அதிபர் ஜி ஜின்பிங்கே மீண்டும் பதவியேற்கப்போவதாகச் செய்திகள் பரவ, மக்கள் பலர் ஜி ஜின்பிங்குக்கு எதிராகக் குரலெழுப்பிவருகின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்இந்த நிலையில் சுமார் 2,300 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், ``ஹாங்காங்கை முழுவதுமாக சீனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது" என அதிபர் ஜி ஜின்பிங் கூறியிருக்கிறார்.மேலும் தைவான் குறித்து ஜி ஜின்பிங் தன்னுடைய உரையில், ``தைவான் பிரிவினைவாதம் மற்றும் தலையீட்டுக்கு எதிராக நாங்கள் ஒரு பெரிய போராட்டத்தை உறுதியுடன் நடத்தியுள்ளோம். அதோடு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும், தைவான் சுதந்திரத்தை எதிர்ப்பதற்கும் எங்களின் வலுவான உறுதியையும் திறனையும் வெளிப்படுத்துகிறோம். 96 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி, மனித வரலாற்றில் வறுமைக்கு எதிரான மிகப்பெரிய போரில் வெற்றி பெற்றிருக்கிறது" எனக் கூறினார். சீன அதிபர் ஜி ஜின்பிங்முதலில் சீனாவில் 2 முறை மட்டுமே ஒருவர் அதிபராக இருக்க முடியும் என்று சட்டம் இருந்தது. ஆனால், 2017-ல் 2-வது முறையாக ஜி ஜின்பிங் அதிபராகப் பதவியேற்ற அடுத்த வருடமே, இந்த சட்டத்தை அவர் நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, 3-வது முறையாக ஜி ஜின்பிங் அதிபராகப் பதவியேற்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.``அடிமையாக இருக்காதீர்கள்; தேசத்துரோகியை நீக்குங்கள்..!" - சீன அதிபருக்கு எதிராகப் போராடும் மக்கள்

``ஹாங்காங்கை முழுவதுமாக சீனா கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது!" - தேசிய மாநாட்டில் ஜி ஜின்பிங் பேச்சு

சீனக் குடியரசு நாட்டை ஆட்சி செய்துவரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின்(CCP) 20-வது தேசிய மாநாடு பீஜிங்கில் இன்று தொடங்கியது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த மாநாடு, இன்று(அக்டோபர் 16) முதல் அக்டோபர் 22-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதுவொருபுறம் நடந்துகொண்டிருக்க, மூன்றாவது முறையாக அதிபர் ஜி ஜின்பிங்கே மீண்டும் பதவியேற்கப்போவதாகச் செய்திகள் பரவ, மக்கள் பலர் ஜி ஜின்பிங்குக்கு எதிராகக் குரலெழுப்பிவருகின்றனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

இந்த நிலையில் சுமார் 2,300 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், ``ஹாங்காங்கை முழுவதுமாக சீனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது" என அதிபர் ஜி ஜின்பிங் கூறியிருக்கிறார்.

மேலும் தைவான் குறித்து ஜி ஜின்பிங் தன்னுடைய உரையில், ``தைவான் பிரிவினைவாதம் மற்றும் தலையீட்டுக்கு எதிராக நாங்கள் ஒரு பெரிய போராட்டத்தை உறுதியுடன் நடத்தியுள்ளோம். அதோடு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும், தைவான் சுதந்திரத்தை எதிர்ப்பதற்கும் எங்களின் வலுவான உறுதியையும் திறனையும் வெளிப்படுத்துகிறோம். 96 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி, மனித வரலாற்றில் வறுமைக்கு எதிரான மிகப்பெரிய போரில் வெற்றி பெற்றிருக்கிறது" எனக் கூறினார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

முதலில் சீனாவில் 2 முறை மட்டுமே ஒருவர் அதிபராக இருக்க முடியும் என்று சட்டம் இருந்தது. ஆனால், 2017-ல் 2-வது முறையாக ஜி ஜின்பிங் அதிபராகப் பதவியேற்ற அடுத்த வருடமே, இந்த சட்டத்தை அவர் நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, 3-வது முறையாக ஜி ஜின்பிங் அதிபராகப் பதவியேற்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.