சியான்61 படத்தின் தலைப்பு நாளை வெளியீடு - படக்குழு அறிவிப்பு

Cyan61 Movie Title Release Tomorrow Announcement

சியான்61 படத்தின் தலைப்பு நாளை வெளியீடு - படக்குழு அறிவிப்பு

இயக்குனர் பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது இயக்கியபிறகு அடுத்ததாக எடுத்து வருகிற படம் ’சியான்61’ விக்ரமின் 61 ஆவது படம் என்பதால் சியான் 61 என்ற பெயரிலேயே குறிப்பிடப்பட்டு வந்தது. இந்த நிலையில் சியான்61 படத்தின் தலைப்பு நாளை வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு விக்ரம் நடிக்கும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 1800 வது வருட காலகட்டத்தில் கேஜிஎப் பகுதியின் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்படுக்கிறது என்று பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கியது. விக்ரமின் ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிவருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பெயர் குறித்த அறிவிப்பினை நாளை இரவு 8 மணிக்க வெளியிடுவதாக பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.