வாரிசு படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்

The famous company that has bagged the distribution rights of Vaarisu

வாரிசு படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்

இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் தளபதி விஜய் . படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டது. இந்த படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகமாக்கி வருகிறது. சமீபத்தில் ரஞ்சிதமே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில் வாரிசு படத்தின் விநியோக உரிமையை 7ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.