விக்ரம் படத்தின் வசூலை முறியடித்த பொன்னியின் செல்வன் 1 - எவ்வளவு வசூல் தெரியுமா?

Ponni's Selvan 1 has beaten Vikram's collection - Do you know how much it collected?

விக்ரம் படத்தின் வசூலை முறியடித்த பொன்னியின் செல்வன் 1 - எவ்வளவு வசூல் தெரியுமா?

மணித்ரனம் இயக்கி வெளிவந்த பொன்னியின் செல்வன் 450 கோடி ரூபாய் வசூல் செய்து கமல் நடித்த விக்ரம் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை திரைவடிவமாக இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுவந்தது. இருப்பினும் படத்தின் வசூல் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. 

கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ள பொன்னியின் செல்வன் படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. 

படம் வெளியாகிய முதல் நாள் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் ரூ.78.29 கோடியும், இரண்டாவது நாள் ரூ.60.16 கோடியும், மூன்றாவது நாள் ரூ.64.42 கோடியும் வசூல் செய்தது. 

பொன்னியின் செல்வன் படம் உலக அளவில் வசூல் செய்த தொகையை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 200 கோடி வசூல் செய்திருக்கும் பொன்னியின் செல்வன் படம் உலக அளவில் இதுவரை 450 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ.500  கோடியை எட்டும் என்று படக்குழு எதிர்பார்த்து இருக்கிறது. நடிகர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் தான் அதிக வசூல் செய்த  தமிழ்படமாக இருந்து வந்தது. இரண்டாவது இடத்தில் ரஜினி நடித்த எந்திரன் 2.0 இருந்தது. தற்போது பொன்னியின் செல்வன் முதல் இடத்தை எட்டியதால் கமல் நடித்த விக்ரம் படம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

History in the making ????????#PS1 ????️ hits a staggering 450+ crores at the box office ✨

Thank you for all the love and support!#PonniyinSelvan1 ????️ #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/XXAApSo2Ij

— Lyca Productions (@LycaProductions) October 19, 2022