ராஜாகிளி படத்தின் செகண்ட் லுக் வெளியானது

The second look of Rajagli has been released

ராஜாகிளி படத்தின் செகண்ட் லுக் வெளியானது

தம்பிராமையா சமுத்திரக்கனி கூட்டணியில் அடுத்ததாக திரைக்கு வர இருக்கும் புதிய படம் ராஜாகிளி.  சாட்டை, அப்பா, விநோதய சித்தம் படங்களின் வரவேற்பைத் தொடர்ந்து ராஜாகிளி தயாராகிறது. இந்த படத்திற்கு கதை,திரைக்கதை வசனம்,பாடல்கள், இசை வரை அத்தனை பொறுப்புகளையும் செய்கிறார். படத்தை உமாபதி ராமையா இயக்குகிறார். இந்த படத்தினை வீ ஹவுஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.