`மருத்துவச்சோதனை என உள்ளே விரல் விடுவார்கள்': டீன் ஏஜ் பாலியல் தொல்லை; அனுபவம் பகிர்ந்த நடிகை!

பாலியல் தொல்லைகளைக் கடந்து வராத பெண்கள் அரிது. சிலர் வெளிப்படையாக அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பலர் சொன்னால், தன்னுடைய சுதந்திரம் பறிக்கப்பட்டு விடுமோ, தன் மீது குற்றம் சுமத்தப்படுமோ என மனதுக்குள்ளே புழுங்கிக் கொள்வார்கள். இளம் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் தங்களுக்கு நேர்ந்தது பாலியல் அத்துமீறல் தான் எனப் புரிந்துகொண்டாலும், இன்னும் பல பிஞ்சுக் குழந்தைகளுக்கு அத்தகைய கொடூரச்செயல் தன்மீது நிகழ்த்தப்பட்டது என்பது கூடத் தெரியாது. வளர்ந்த பிறகே தன்னுடைய குழந்தைப் பருவம் சிதைக்கப்பட்டது என்பது விளங்க ஆரம்பிக்கும்.அப்படி தன்னுடைய இளமைப்பருவத்தில், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை குறித்து, நியூயார்க் டைம்ஸ் வீடியோவில் மனம் திறந்துள்ளார், அமெரிக்காவை சேர்ந்த 41 வயதான மாடல் மற்றும் நடிகை பாரிஸ் ஹில்டன் (Paris Hilton).அவர் கூறுகையில், ``1990-ம் ஆண்டு மனநலம் சற்று பாதிக்கப்பட்ட (troubled teens) டீன் ஏஜில் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ப்ரோவோ கேன்யன் பள்ளியில் (Provo Canyon School) என்னுடைய பெற்றோர் என்னைச் சேர்த்தனர்.அங்கே 3 அல்லது 4 மணிவாக்கில், என்னையும் சில பெண்களையும் ஓர் அறைக்கு அழைத்துச் சென்று மருத்துவ சோதனைகளைச் செய்வார்கள். இரண்டு வெவ்வேறு பணியாளர்கள் எங்களை வலுக்கட்டாயமாக மேசையின் மீது படுக்க வைத்து, அரைத் தூக்கத்தில் இருக்கும் எங்களுக்கு மருந்துகளை வழங்கி, கால்களை விரிக்கச் சொல்லி, உள்ளே விரல்களை விட்டு சர்விகல் எக்ஸாமினேஷன் (cervical examination) செய்வார்கள். அந்தச் சமயத்தில் டாக்டர் இருக்க மாட்டார். என்ன செய்கிறார்கள் என்பதுகூட தெரியாது. அது மிகவும் பயமாக இருக்கும்.I opened up in a @NYTimes video about something I’ve never discussed before. At Provo Canyon School, I was woken up in the middle of the night by male staff who ushered me into a private room and performed cervical exams on me in the middle of the night. https://t.co/mWxF8Pvmaw— ParisHilton (@ParisHilton) October 11, 2022 “பாலியல் தொல்லைக்கு எதிரான தீர்வு தொடங்குவது... இங்கிருந்துதான்!”ஆனால் இப்போது, வயது வந்தவராக அந்த நினைவைத் திரும்பிப் பார்த்தால், அது ஒரு பாலியல் துஷ்பிரயோகம் என்று தெரிகிறது. என்னுடைய குழந்தைப் பருவம் என்னிடமிருந்து திருடப்பட்டது; இன்னும் மற்ற அப்பாவி குழந்தைகளுக்கு இது போன்று நடக்கிறது என்பது என்னைக் கொல்கிறது. பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு உதவ, என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.அதோடு பெற்றோர்கள் உங்கள் குழந்தைகள் தைரியமாகப் பேசவும், எவ்வித அச்சமுமின்றி அத்துமீறல்களைத் தெரிவிக்கவும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்’’ என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்."பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா; மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா"ரௌத்திரம் கொள்ளடி கண்ணம்மா..!

`மருத்துவச்சோதனை என உள்ளே விரல் விடுவார்கள்': டீன் ஏஜ் பாலியல் தொல்லை; அனுபவம் பகிர்ந்த நடிகை!

பாலியல் தொல்லைகளைக் கடந்து வராத பெண்கள் அரிது. சிலர் வெளிப்படையாக அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பலர் சொன்னால், தன்னுடைய சுதந்திரம் பறிக்கப்பட்டு விடுமோ, தன் மீது குற்றம் சுமத்தப்படுமோ என மனதுக்குள்ளே புழுங்கிக் கொள்வார்கள்.

இளம் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் தங்களுக்கு நேர்ந்தது பாலியல் அத்துமீறல் தான் எனப் புரிந்துகொண்டாலும், இன்னும் பல பிஞ்சுக் குழந்தைகளுக்கு அத்தகைய கொடூரச்செயல் தன்மீது நிகழ்த்தப்பட்டது என்பது கூடத் தெரியாது. வளர்ந்த பிறகே தன்னுடைய குழந்தைப் பருவம் சிதைக்கப்பட்டது என்பது விளங்க ஆரம்பிக்கும்.

அப்படி தன்னுடைய இளமைப்பருவத்தில், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை குறித்து, நியூயார்க் டைம்ஸ் வீடியோவில் மனம் திறந்துள்ளார், அமெரிக்காவை சேர்ந்த 41 வயதான மாடல் மற்றும் நடிகை பாரிஸ் ஹில்டன் (Paris Hilton).

அவர் கூறுகையில், ``1990-ம் ஆண்டு மனநலம் சற்று பாதிக்கப்பட்ட (troubled teens) டீன் ஏஜில் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ப்ரோவோ கேன்யன் பள்ளியில் (Provo Canyon School) என்னுடைய பெற்றோர் என்னைச் சேர்த்தனர்.

அங்கே 3 அல்லது 4 மணிவாக்கில், என்னையும் சில பெண்களையும் ஓர் அறைக்கு அழைத்துச் சென்று மருத்துவ சோதனைகளைச் செய்வார்கள். இரண்டு வெவ்வேறு பணியாளர்கள் எங்களை வலுக்கட்டாயமாக மேசையின் மீது படுக்க வைத்து, அரைத் தூக்கத்தில் இருக்கும் எங்களுக்கு மருந்துகளை வழங்கி, கால்களை விரிக்கச் சொல்லி, உள்ளே விரல்களை விட்டு சர்விகல் எக்ஸாமினேஷன் (cervical examination) செய்வார்கள். அந்தச் சமயத்தில் டாக்டர் இருக்க மாட்டார். என்ன செய்கிறார்கள் என்பதுகூட தெரியாது. அது மிகவும் பயமாக இருக்கும்.

ஆனால் இப்போது, வயது வந்தவராக அந்த நினைவைத் திரும்பிப் பார்த்தால், அது ஒரு பாலியல் துஷ்பிரயோகம் என்று தெரிகிறது. என்னுடைய குழந்தைப் பருவம் என்னிடமிருந்து திருடப்பட்டது; இன்னும் மற்ற அப்பாவி குழந்தைகளுக்கு இது போன்று நடக்கிறது என்பது என்னைக் கொல்கிறது. பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு உதவ, என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அதோடு பெற்றோர்கள் உங்கள் குழந்தைகள் தைரியமாகப் பேசவும், எவ்வித அச்சமுமின்றி அத்துமீறல்களைத் தெரிவிக்கவும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்’’ என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா; மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா"

ரௌத்திரம் கொள்ளடி கண்ணம்மா..!