இம்மானுவேல் ஈமுவுக்கு பறவைக்காய்ச்சல்| BTS குழுவின் கட்டாய ராணுவ பயிற்சி- உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

சிலி நாட்டில் மிகவும் புகழ்பெற்ற சோம்பி வாக் (Zombie Walk) நடைபெற்றது. வித்தியாசமான வேடமணிந்து மக்கள் வீதிகளில் நடந்து செல்வது இந்த நிகழ்வின் சிறப்பு. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் (LGBT) பெருமிதப் பேரணி நடைபெற்றது.நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் கால்பந்து உலகக்கோப்பையை காண ஒன்றரை லட்சம் பேர் கட்டாய பாஸ் வேண்டி விண்ணப்பித்துள்ளதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது. தாய்லாந்து இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். கிரேக்க நாட்டின் க்ரீட் தீவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி இரண்டு பேர் பலி. இணைய வைரல், டிக் டாக் புகழ் இம்மானுவேல் என்கிற ஈமு கோழி பறவைக் காய்ச்சலால் பாதிப்பு.பாப் இசைக்குழுவான BTS உறுப்பினர்கள் கட்டாய ராணுவ பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுசில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் 8 மாதக் குழந்தை உட்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கடத்திக் கொலைசெய்யப்பட்டனர். இறந்தவர்கள் இறுதி ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

இம்மானுவேல் ஈமுவுக்கு பறவைக்காய்ச்சல்| BTS குழுவின் கட்டாய ராணுவ பயிற்சி- உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

சிலி நாட்டில் மிகவும் புகழ்பெற்ற சோம்பி வாக் (Zombie Walk) நடைபெற்றது. வித்தியாசமான வேடமணிந்து மக்கள் வீதிகளில் நடந்து செல்வது இந்த நிகழ்வின் சிறப்பு.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் (LGBT) பெருமிதப் பேரணி நடைபெற்றது.

நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் கால்பந்து உலகக்கோப்பையை காண ஒன்றரை லட்சம் பேர் கட்டாய பாஸ் வேண்டி விண்ணப்பித்துள்ளதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

தாய்லாந்து இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர்.

கிரேக்க நாட்டின் க்ரீட் தீவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி இரண்டு பேர் பலி.

இணைய வைரல், டிக் டாக் புகழ் இம்மானுவேல் என்கிற ஈமு கோழி பறவைக் காய்ச்சலால் பாதிப்பு.

பாப் இசைக்குழுவான BTS உறுப்பினர்கள் கட்டாய ராணுவ பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் 8 மாதக் குழந்தை உட்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கடத்திக் கொலைசெய்யப்பட்டனர். இறந்தவர்கள் இறுதி ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்